About Us -Tamil- ykk-shopping

ykk-shopping

எங்களைப் பற்றி

Y&KK MANUFACTURING COMPANY (PVT) LTD என்பது ஒரு சாதாரண தொழில்முயற்சியாக தொடங்கி, இன்று தரம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை இலக்காகக் கொண்டு வளர்ந்து வரும் இலங்கை உற்பத்தி நிறுவனமாகும்.

நான் முதலில் நாவலப்பிட்டியில் வசித்தபோது, 2016 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி பிரதேச சபையினால் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சிகளையும், பின்னர் தொழிற்கல்வி அதிகாரசபை (VTA) வழங்கிய துறைசார் பயிற்சிகளையும் பெற்று, “YK” என்ற பெயரில் பெண்களுக்கான ஆடைகள், கைப்பைகள் மற்றும் பாடசாலைப் பைகளை வீட்டிலிருந்தே தைத்து வழங்கத் தொடங்கினேன்.

2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றும் குடும்ப சூழ்நிலைகளும் காரணமாக, எதிர்பாராத விதமாக குடும்பத்துடன் வவுனியாவிற்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய இடத்தில் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், சில நல்ல உள்ளங்களின் ஊக்கமும் ஆலோசனையும் எனக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.

அதன் தொடர்ச்சியாக, 2023 ஆம் ஆண்டு வவுனியா பல்கலைக்கழகம் நடத்திய சிறு வியாபார முகாமைத்துவமும் முயற்சியான்மையும் தொடர்பான சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தேன். அந்தக் கல்வியும் அனுபவமும், என் சுயதொழிலை ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக மாற்றி, தரமான உற்பத்திகளின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தியது.

அதன் அடிப்படையில், “YK” என்ற பெயரில் இயங்கி வந்த தொழிலை, Y&KK MANUFACTURING COMPANY (PVT) LTD என மறுபெயரிட்டு, வவுனியாவை மையமாகக் கொண்டு நிறுவினோம்.

எங்கள் தரத்திற்கான ஒரு முக்கியமான அங்கீகாரமாக, வவுனியா பல்கலைக்கழகத்திற்காக சிறப்பு வடிவமைப்பில் ஒரு பையை உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றோம். அந்த உற்பத்தி தரம் மற்றும் தொழில்முறை செயற்பாட்டிற்காக பல்கலைக்கழகத்தின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றிருப்பது எங்களுக்கு பெருமைக்குரிய சாதனையாகும். இந்த அங்கீகாரம், எங்கள் தரநிலைக்கும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கும் ஒரு உறுதியான சான்றாக விளங்குகிறது.

ykk-shopping.com

இன்று எங்கள் நிறுவனம் உயர்தரமான பாடசாலைப் பைகள், கைப்பைகள், Plus Size பெண்களுக்கான ஆடைகள் மற்றும் பல தரமான உற்பத்திப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதில் பெருமை கொள்கிறது.

எங்கள் புதிய இணையதளத்தின் மூலம் அனைத்து தயாரிப்புகளையும் எளிதாகப் பார்வையிட்டு, பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் ஆர்டர் செய்யலாம்.

தரம் • நம்பிக்கை • புதுமை • நியாயமான விலை • வாடிக்கையாளர் திருப்தி என்பவையே எங்கள் நிறுவனத்தின் அடிப்படை மதிப்புகளாகும்.

Y&KK MANUFACTURING COMPANY (PVT) LTDஉயர்தர உற்பத்தி… நிலையான நம்பிக்கை.

Message from the Director

Welcome to Y&KK Manufacturing Company (Pvt) Ltd.

Thank you for visiting our website.

Since 2016, we have been committed to delivering quality products and reliable service. Our goal is to build lasting relationships through trust, innovation, and customer satisfaction.

We appreciate your confidence in our company and look forward to serving you with excellence.

Thank you.

Dharshini Ganeshan
Director
Y&KK Manufacturing Company (Pvt) Ltd

 
 

 

 

Director ykk-shopping.

Director

Dharshini Ganeshan